உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

கிடப்பில் போடப்பட்ட அழிசிக்குடி சாலை:குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் அவதி

புவனகிரி:

          புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு - அழிசிக்குடி சாலை போடும் பணி துவங்கப்படாததால் குண்டும் குழியுமான சாலையில் செல்ல வேண் டிய நிலையில் மக்களின் அவதி தொடர்கிறது. 

            புவனகிரி அடுத்த அழிசிக்குடி, நாலாந்தெத்து கிராம மக்கள் இரண்டு கி.மீ., தூரம் உள்ள வண்டுராயன்பட்டிற்கு வந்து பஸ் பிடித்து நகர பகுதிக்கு வர வேண்டும். இந்நிலையில் வண்டுராயன்பட்டில் இருந்து அழிசிக்குடி செல்லும் சாலை கடந்த ஓராண்டிற்கும் மேலாக குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதிக்கு இயக்கப்பட்ட இரண்டு மினி பஸ்களும் நிறுத்தப் பட்டது. அப்பகுதி பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

            இது குறித்து அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்ததின் பேரில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 53 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தில் அழிசிக்குடிக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் திட்ட நிதி மூலம் பணி தொடங்கப்பட்டது. அப்போது துவங்கிய இந்த சாலை போடும் பணி குறிப்பிட்ட காலத்திற்குள் போடப்படாததால் மீண்டும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

                இந்நிலையில் அப்பகுதி கம்யூ., கட்சியினர் நாற்று நடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதத்திற்கு முன் தார்சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால் சாலை பணி துவங்காததால் மக்களின் அவதி தொடர்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior