உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

பண்ருட்டியில் பூச்சித் தாக்குதல் வீழ்ச்சியை சந்திக்கும் தோட்டப்பயிர் விவசாயிகள்


மாவு பூச்சி பாதிக்கப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு செடியின் தண்டு. (வலது படம்) காய்ப்புழுவால் சொத்தையாகியுள்ள கத்திரி காய்கள்.
பண்ருட்டி:
 
              பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப் பயிர்கள் பூச்சித் தாக்குதல் காரணமாக பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
 
            பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் வட்டாரப் பகுதியில் மண் மற்றும் நீர் வளம் நிறைந்து காணப்படுவதால் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனால் இப்பகுதியில் நெல், கரும்பு ஆகியவற்றுடன் தோட்டப் பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. பண்ருட்டி அருகே திராசு, இராசப்பாளையம், கட்டமுத்துப்பாளையம், பணப்பாக்கம், சூரக்குப்பம், தட்டாம்பாளையம் உள்ளிட்ட 50-ம் மேற்பட்ட கிராமப் பகுதியில் தோட்டப் பயிர்களான மரவள்ளி, வாழை மற்றும் கத்திரி, பாகல், புடலை, முருங்கை, கோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, கொத்தவரை உள்ளிட்டவை அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன.
 
           தற்போது மரவள்ளி பயிரில் மாவுப் பூச்சி, சப்பாத்தி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இலையில் உள்ள சாறுகள் உறுஞ்சப்பட்டு இலைகள் உதிர்ந்து காணப்படுகின்றன.கத்திரிச் செடியில் அசும்பு, புழுத் தாக்குதல் ஏற்பட்டு உள்ளதால் செடிகள் குஷ்டம் பிடித்தது போல் உள்ளது. மேலும் செடியில் உள்ள காய்களை புழுக்கள் தாக்கி சொத்தை விழுந்து அழுகச் செய்கின்றன. இதே போல் முருங்கை மரங்களும் பூச்சி தாக்குதல் காரணமாக இலைகள் உதிர்ந்து வருவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து திராசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.ராஜசேகர் கூறியது.
 
           எனது நிலத்தில் மரவள்ளி பயிரிட்டுள்ளேன். மரவள்ளியில் பூச்சித் தாக்குதல் இருக்காது. ஆனால் தற்போது மாவுப்பூச்சி, சப்பாத்தி நோவு தாக்கியுள்ளது. இதனால் இலையில் உள்ள சாறு உறுஞ்சப்பட்டு உதிர்ந்து வருகிறது. இதனால் கிழங்கு பெருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல் முருங்கையில் பூச்சித் தாக்குதல் காரணமாக இலைகள் உதிர்ந்து  மகசூல்  பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
 
த்திரி விவசாயி சக்கரபாணி கூறியது: 
 
           பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு செடியே வீணாகி உள்ளது. பலமுறை மருந்து அடித்தும் அசும்பு பூச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. காய்ப்புழு தாக்குதல் அதிகம் இருப்பதால் பிஞ்சுகள் பாதிக்கப்பட்டு அழுகி வருகிறது. செலவு செய்த பணம் கிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே உள்ளேன் என்றார். விதை, உரம், பூச்சி மருந்து விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை, மின்வெட்டு, வறட்சி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு இடையே தோட்டப் பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு, இந்த பூச்சித் தாக்குதல் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.  
 
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரேமா கூறியது:
 
            மரவள்ளியில் மாவு பூச்சித் தாக்குதல் உள்ளது. இது குறித்து விவசாயிகளுக்கு மருந்து மற்றும் தெளிக்கும் விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். மழை பெய்தால் மாவு பூச்சி தானாக அழிந்துவிடும். இல்லை என்றால் இரு நாள்கள் பொறுத்து மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்.கத்திரி மற்றும் முருங்கையில் பூச்சுத் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. மழையின்மை மற்றும் வெயிலின் காரணமாக பூச்சித் தாக்குதல் ஏற்படும். தாக்குதலுக்கு உண்டான தோட்டத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமா கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior