உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

விஏஓ தேர்வில் வயது வரம்பு சலுகை ரத்து: பட்டதாரிகள் அதிர்ச்சி

நெய்வேலி:
 
          விஏஓ தேர்வுக்கான வயதுவரம்பு சலுகையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ரத்து செய்திருப்பதால் வயது முதிர்ந்த பட்டதாரிகள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
            டிஎன்பிஎஸ்சி கடந்த 21-ம் தேதி, 1576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் விஏஓ தேர்வுக்கு வயது வரம்பு சலுகையை பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு அடியோடு திடீரென்று ரத்து செய்து அறிவிப்பு வெளியாகிள்ளது.
 
                 டிஎன்பிஎஸ்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர், எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் அனைத்து சாதிகளையும் சேர்ந்த விதவைகள், உள்ளிட்டோர் பட்டதாரிகளாக இருப்பின் அவர்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை என்ற சலுகை வழங்கப்ட்டிருந்தது.
 
           கடந்த 2007-ம் ஆண்டு நடபெற்ற விஏஓ தேர்விலும் இச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய போட்டித் தேர்வில் இச்சலுகை பறிக்கப்பட்டுள்ளதால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இன்று அரசு வேலை 40 வயதிலிருந்து 50 வரைதான் கிடைக்கிறது. அரசு ஊழியர்கள் போட்டித் தேர்வெழுதி 57 வயது வரை பதவி உயர்வு பெறுகின்றனர். அத்தகைய வாய்ப்பும் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. 
 
              இந்த அறிவிப்பு வரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கும் பொருந்துமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அனைத்துப் பட்டதாரிகளுக்கும் எப்போதும் போல் வயதுவரம்புச் சலுகை வழங்கவேண்டுமென்று தமிழ்நாடு திறந்தநிலை பட்டதாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior