உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

வாகன நிறுத்துமிடமாக மாறிய கடலூர் ஆட்சியர் அலுவலக நுழைவாயில்


வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில்.
கடலூர்,:
 
          டலூர் ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவுவாயில், தற்போது வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறியிருக்கிறது.
 
               கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலகமாகத் திகழ்ந்தது. மின் விசிறிகள் பிற்காலத்தில் பொருத்தப்பட்ட போதிலும், அலுவலகத்தில் எந்த அறையிலும் மின்விசிறி இல்லாமலே கோடைக் காலத்தில் நல்ல காற்றோட்டத்துடன் திகழும் வகையில், சிறந்த கட்டடக்கலை அமைப்புடன் கட்டப்பட்டு இருப்பது வியப்பை அளிக்கிறது.இந்த ஆட்சியர் அலுவலகத்தில், பணிபுரிவது பெருமைக்கு உரியது என்று, பல மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த, ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் பிரதான வாயிலில், சில ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் செலவில் அழகுற முகப்பு மண்டபம் கட்டப்பட்டது.
 
             அழகுக்கு அழகு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த முகப்பு மண்டபம், தற்போது இக்கட்டடத்தில் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிவோரால், இருசக்கர வாகன நிறுத்தும் இடமாக, அண்மைக் காலமாக மாற்றப்பட்டு இருப்பது, பொதுமக்களை பெரிதும் வேதனையில் ஆழ்த்தி வருகிறது. அதுமட்டுமன்றி பிரதான வாயில் வழியாக ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்வதும் சிரமமாக உள்ளது என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இக்கட்டடத்தின் பின்பகுதியில், ஊழியர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆட்சியர் அலுவலக நுழை வாயில் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி இருப்பது ஆட்சியர் அலுவலகத்துக்கு, பெருமை சேர்ப்பதாக இல்லை என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior