உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

சேத்தியாத்தோப்பு பகுதியில் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்: அரசின் நடவடிக்கையால் பலன் கிட்டியது

சேத்தியாத்தோப்பு:

            சேத்தியாத்தோப்பு பகுதியில் கரும்பு விலை உயர்வு மற்றும் எம்.ஆர். கே., சர்க்கரை ஆலை ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் கரும்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

             சேத்தியாத்தோப்பு பகுதியில் நெல் மட்டுமே பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் உருவாக்கப்பட்ட சர்க்கரை ஆலை வரப்பிரசாதமாக அமைந்தது. 1989ம் ஆண்டு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டதிலிருந்து இப்பகுதி விவசாயிகள் உணவுத் தேவைக்கு நெற் பயிரையும், பணத்தேவைக்கு கரும்பையும் பயிரிட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த விலை கிடைக்காததால் கரும்பு பயிரிட தயங்கினர். 

              இந்நிலையில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்புத் துறையில் நடந்த முறைகேடுகளால் இனிக்கும் கரும்பு, விவசாயிகளுக்கு வேம்பாகியது.இதன் காரணமாக கடந்த 2009-2010ம் ஆண்டு குறைந்த பட்ச அறவைத் திறனுக்கு தேவையான 4.5 லட்சம் டன் கரும்பு கூட கிடைக்காததால் 2 லட் சத்து 635 டன் மட்டுமே கரும்பு அறவை செய்யப் பட்டது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வந்த ஆலையை மீட்கும் வகையில் தமிழக அரசும் சர்க் கரை துறை ஆணையமும் இணைந்து, ஆலைக்கு புதிய ஆட்சியராக ஆசியா மரியத்தை கடந்த பிப்ரவரி மாதம் நியமித்தது.

             அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் 2010-2011 கரும்பு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஓரளவிற்கு ஆறுதலை தந்த போதிலும் பருவ மழை மாற்றம், இயற்கை சீற்றம், மின் தட்டுப்பாடு, கூலித் தொழிலாளர்கள் பற் றாக்குறை என பல்வேறு பிரச்னைகள் விவசாயிகளை அச்சுறுத்தியது.நிலமையை உணர்ந்து எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆட் சியர் ஆசியா மரியம் ஆலை நிர்வாகத்தில் இருந்த முறைகேடுகளை களைய நடவடிக்கை மேற் கொண்டார்.

                அதன் காரணமாக கரும்பு உதவியாளர் கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வரத் துவங்கினர். கரும்பு வெட்டு உத்தரவுகளை கம்ப்யூட்டர் மூலம் வழங்க ஏற்பாடு செய்தார்.மேலும், அனைத்து கரும்பு கோட்ட அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று அப்பகுதி விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார். அந்த குறைகளை களையவும் நடவடிக்கை மேற்கொண்டார். ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை ஆலையின் நிர்வாகத்தின் மீது விவசாயிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

                    மேலும், தமிழக அரசு சமீபத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கூட்டு மின் உற்பத்தி திட்டத்தை உருவாக்கியிருப்பதும் விவசாயிகளிடையே கரும்பு பயிரிட ஆர்வத்தை தூண் டியுள்ளது. 2009-2010ம் ஆண்டு கரும்பு பதிவு மிக குறைவாக இருந்த நிலையில் உடனடி பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தும் கூட 10 ஆயிரத்து 590 ஏக்கர் கரும்பு பயிர் மட்டுமே பதிவு செய்து அறவை செய்யப் பட்டது. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை மற்றும் அரசின் புதிய அறிவிப்புகளால் இப்பகுதி விவசாயிகள் தற்போது ஆர்வத்துடன் கரும்பு பயிரிட்டு வருகின்றனர்.

             இதன் காரணமாக நடப்பு (2010-2011ம்) ஆண் டின் அறவை பருவத்திற்கு கடந்த ஜூன் மாதம் வரையில் 10 ஆயிரத்து 436 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி வரையில் கரும்பு பதிவிற்கான காலக்கெடு உள்ளதாலும், உடனடி பதிவு திட்டத்தின் மூலம் மேலும் ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பதிவாகும் என ஆலை நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்சியரின் நடவடிக்கையால் புதிய ரக கரும்பு பயிர்கள் நடவு செய்துள்ளதால் அதிக மகசூல் வாய்ப்பு இருக்கும் என்பதால் ஆலை அறவைக்கு தேவைக்கு கூடுதலாகவே கரும்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior