உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

கடலூரில் ரவுடி கும்பல் சுற்றி வளைப்பு:போலீசாருக்கு எஸ்.பி., ரிவார்டு

கடலூர்:

         கடலூரில் ரவுடியை கொலை செய்ய வெடிகுண்டுகளுடன் திரிந்து கைது செய்யப்பட்ட நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்படும் என எஸ்.பி., தெரிவித்தார்.

இது குறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:

             மணல் மேடு சங்கர் மற்றும் மயிலாடுதுறை அடுத்த ஆத்தூர் வீரமணி ஆகியார் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி வெள்ள குணா, மணல்மேடு சங்கருக்கு ஆதரவாக வீரமணி கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ததால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக வீரமணி கோஷ்டியைச் சேர்ந்த ஏழு பேர், நாளை (27ம் தேதி) கடலூர் கோர்ட்டுக்கு விசாரணைக்காக வரும் வெள்ள குணாவை கொலை செய்ய வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த போது தேவ் என்கின்ற தேவராஜ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்படும். இந்த கோஷ்டியைச் சேர்ந்த மேலும் மூவரை தேடி வருகிறோம். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள்.

ரிவார்டு: 

              கடலூர் மாவட்டத்தில் சிறப்புப் படை சப் இன்ஸ்பெக்டர்கள் அமீர்ஜான், அம்பேத்கார் தலைமையிலான போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது நால்வரை கைது செய்து நடக்க இருந்த அசம்பாவிதத்தை தடுத்த அமீர்ஜான் உள்ளிட்ட சிறப்புப் படையினருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி., உத்தரவின் பேரில் 5,100 ரூபாய் ரிவார்டு வழங்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior