உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளிக் கட்டட பிரச்னை 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புதல்

ஸ்ரீமுஷ்ணம்: 

              அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை தருவதாக கூறியதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.

             ஸ்ரீமுஷ்ணம் அரசு உயர் நிலைப்பள்ளி கட்டடம் கட்ட மலைமேடு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத் தில் கடந்த ஏப்ரல் மாதம் இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் தவறுதலாக மனைப் பட்டா வழங்கப்பட்டது. இதனால் இந்த இடத்தில் குடியிருந்து வந்த 6 பேருக்கு மாற்று இடம் தருவது குறித்து தினமலரில் வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து கடந்த வாரம் தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாற்று இடம் தர முடிவு செய்யப்பட்டது. ஆனால் வீட்டை பிரித்து வேறு இடத்தில் கட்டுவதற்கு குடியிருப்பவர்கள் இழப்பீட்டுத் தொகை கேட்டதால் பணிகள் துவங்க தாமதமானது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி, தி.மு.க., நகர செயலாளர் தங்க ஆனந் தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குடியிருப்பவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் வீடுகளை பிரித்து கட்டுவதற்கு தனது சொந்த பொறுப்பில் செய்து தருவதாக தங்க ஆனந்தன் மற்றும் செல்வி ஆகியோர் உறுதியளித்தனர். இதன் பின்னர் குடியிருப்பவர்கள் வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் மாற்று இடம் கொடுப்பதற்கு மலைமேடு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்யும் பணி துவங்கியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior