உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களில் செடிகள் அகற்றம்

சிதம்பரம் : 

            சிதம்பரம் நடராஜர் கோவிலில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன. 

             கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்கள், கம்பீர தோற்றத்துடன் சிற்ப கலை நுட்பத்துடன் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனால் கோபுரங்கள், முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டதால், அதிக அளவில் செடிகள் வளர்ந்தன. செடிகள் அகற்றப்படாமல் நீடித்தால் கோபுரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஸ்ரீரங்க ராஜகோபுரத்தில் விரிசல், காளஹஸ்தியில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவை இங்கு ஏற்பட்டு விடக்கூடாது என எச்சரித்து, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனையொட்டி உடனடியாக நான்கு கோபுரங்களிலும் உள்ள செடிகள் அகற்றப்பட்டது. தற்போது கோபுரம், "பளிச்' என காட்சியளிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior