உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

           விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் குழு அனுமதி அளித்துள்ளது.

              இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முன் அனுமதி ("லெட்டர் ஆப் இன்டன்ட்'-எல்.ஓ.ஐ.) தில்லியிலிருந்து திங்கள்கிழமை (ஜூலை 12) வந்துள்ளது. மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஒப்புதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) வந்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 எவ்வளவு இடங்கள் கிடைக்கும்? 

                 விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகள் தலா 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படுகிறது. இதில், தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்; மீதமுள்ள 15 எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடாகும்.2008-ல் தொடங்கப்பட்ட தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விரைவில் ஒப்புதல் கிடைத்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

            எனவே, எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வில், தருமபுரி-விழுப்புரம்-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 255 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

முதல் கட்ட கலந்தாய்வின்போது...:

                  சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற்றது.முதல் கட்ட கலந்தாய்வின்போது அனைத்து 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட்டன. எனினும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பி.இ. கலந்தாய்வில், எம்.பி.பி.எஸ். படிப்பு அனுமதிக் கடிதத்தைக் கொடுத்து விட்டு பொறியியல் படிப்புகளில் சில மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதனால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சில காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், முதல் கட்ட கலந்தாய்வு நடந்தபோதே, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் விரைவில் நடைபெற உள்ள தருமபுரி-விழுப்புரம்-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வின்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

திருவள்ளூர் அருகே புதிய தனியார் மருத்துவக் கல்லூரி

               திருவள்ளூர் அருகே 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்கும் வகையில் புதிய தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே குன்னவலத்தில் டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

                           டி.டி. கல்வி அறக்கட்டளையின் கீழ், மொத்தம் ரூ.9.5 கோடிக்கு வங்கி உத்தரவாதத்துடன் இந்த அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் ஓராண்டுக்கு மட்டும் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை அனுமதி புதுப்பிக்கப்படும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இந்தக் கல்லூரியிலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்கு 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.சென்னையில் விரைவில் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கலந்தாய்வில் இந்த இடங்கள் நிரப்பப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior