திட்டக்குடி:
பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராம விவசாயிகளுக்கு நல்லூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் ஐசோபார்ம் எண்ணெய்வித்து திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
நிறைவு நாள் முகாமிற்கு வேளாண் உதவி இயக்குநர் அப்பன்ராஜ் தலைமை தாங்கினார். வக்கீல் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் கதிரவன் வரவேற்றார். இதில் அசோஸ் பைரில்லம், பாஸ்போ - பாக்டீரியா, சூடோமோனாஸ் விதை நேர்த்தி, கோனோ வீடர்க ளை எடுக்கும் கருவி குறித்து கருத்து கண்காட்சியும், செயல்விளக்க பயிற்சியும் அளிக்கப்பட்டது. துணை வேளாண் அலுவலர் பரமசிவம் விளக்கமளித்து பேசினார். துவக்க நாளில் கடலூர் தொழில்நுட்ப அலுவலர் சாலமன் பயிற்சியளித்தார். முகாமில் பாசன சங்கத் தலைவர் ஆறுமுகம், விவசாய கூட்டு பொறுப்புக் குழு தலைவர் கோவிந்தசாமி, முன்னோடி விவசாயி அருள், அனிதா உட்பட 50 விவசாயிகள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக