உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குள் பிரச்னை அதிகாரிகள் நேரில் விசாரணை

பரங்கிப்பேட்டை: 

            பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு பிரிவு மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

            பரங்கிப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நிரந்தர தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதாலும் மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த வாரம் 10ம் வகுப்பு மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

           அவர்களுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரைச் சேர்ந்த மாணவர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். மற்றொரு பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே பிரச்னை உருவானது. இந்நிலையில் நேற்று இந்த பிரச்னை காரணமாக மாணவர்கள் மீண்டும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளியில் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி., மூவேந்தன் மற்றும் போலீசார் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆர்.டி. ஓ., ராமராஜ், முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி ஆகியோர் நேரில் சென்று இரு தரப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அதனையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior