உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

சிதம்பரம் அடுத்த கிள்ளை சுற்றுப் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: படிப்பு பாதிப்பு


கிள்ளை: 

             சிதம்பரம் அடுத்த கிள்ளை சுற்றுப் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் பள்ளி திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

             சிதம்பரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட கிள்ளை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் தேவையான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் சமச்சீர் கல்வி குறித்து மாணவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தரம் உயர்த் தப்பட்ட நடுநிலைப் பள் ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக தொடக்க நிலையில் இருந்து 6ம் வகுப்பிற்கு சென்றுள்ள மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி குறித்த பாடம் நடத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

                    தற்போது எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் மூன்று ஆசிரியர்களும், கிள்ளை பட்டினவர் நடுநிலைப் பள்ளியில் மூன்று, பொன்னந்திட்டு நடுநிலைப் பள்ளியில் நான்கு , முடசல்ஓடை நடுநிலைப் பள்ளியில் இரண்டு , தில்லைவிடங்கன் நடுநிலைப் பள்ளியில் ஒன்று மற்றும் புஞ்சைமகத்து வாழ்க்கை நடுநிலைப்பள்ளி இரண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதை எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை. கோடை விடுமுறையைத் தொடர்ந்து பள்ளிகள் திறந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையில் பாடங்கள் நடத்தப்படாமல் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior