கடலூர்:
கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கடலூரில் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் குடிநீர், சாலை, முதியோர் உதவித் தொகை, பட்டா கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 335 பேர் மனுக்கள் கொடுத்தனர். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 14 பேருக்கு இலவச மனைப்பட்டா, பிற்பட்டோர் நலத்துறை சார்பில் இருவருக்கு தையல் இயந்திரம், பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 12 பேருக்கு கண் கண்ணாடி, வருவாய் துறை சார்பில் மூவருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவுகளை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக