உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்காலை ரூ.200 கோடி செலவில் சீரமைக்க திட்டம்

சிதம்பரம்:

              கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடிகால் மற்றும் பாசன வாய்க்காலான வடக்கு ராஜன் வாய்க்காலை ரூ.200 கோடி செலவில் இருபுறம் கரைகளை பலப்படுத்தி, ஆழப்படுத்தி சாய்வு தள கான்கிரீட் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

               சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் செல்லும் வடக்கு ராஜன் வாய்க்காலில் 43 கி.மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் சாய்வு தள காங்கிரீட் அமைத்து கரையை பலப்படுத்தி, ஆழப்படுத்த மத்திய அரசு திட்டத்தின் நிதி ரூ.200 கோடி கோரப்பட்டுள்ளது. அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில தலைமைப் பொறியாளர்கள் பங்கேற்ற நீர்பாசன புணரமைப்பு கூட்டத்தில் தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் புணரமைப்புத் திட்டத்துக்காக ரூ.1500 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் வடக்கு ராஜன் வாய்க்காலை புனரமைக்க ரூ.200 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. தற்போது காவிரி டெல்டா பாசன திட்ட தொழில்நுட்ப இயக்குநர் மோகன கிருஷ்ணன் தலைமையிலான குழு இத்திட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் 26,335 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வெள்ளப்பெருக்கும் ஏற்படாது என எஸ்.செல்வராஜ் தெரிவித்தார். அப்போது பாசிமுத்தான்ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் உடனிருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior