உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

சிதம்பரம் அடுத்த புஞ்சைமகத்துவாழ்க்கையில் மக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்

கிள்ளை: 

              சிதம்பரம் அடுத்த புஞ்சைமகத்துவாழ்க்கையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

               சிதம்பரம் அடுத்த புஞ்சைமகத்து வாழ்க்கை தாமரைக்குளம் அருகில் சாலையோரத்தில் உள்ள பனை மரம் மற்றும் மூங்கில் மரத்தில் இரு இடங்களில் விஷ வண்டு கூடுகள் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விஷ வண்டுகள் விரட்டுவதால் அச்சத்துடன் செல் கின்றனர். அத்துடன் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நடுநிலைப்பள்ளி உள்ளதால் இடைவேளை மற்றும் மதிய உணவு வேளையில் மாணவர்களை வெளியில் அனுப்ப முடியாமல் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மாணவர்களின் நலனை உணர்ந்து விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior