கிள்ளை:
சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் ஊராட்சி புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு இவலச மனைப்பட்டா கேட்டு ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர்.
இது குறித்து மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, ஊராட்சி தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள மனு:
சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் ஊராட்சி மேலச்சாவடியில் இருந்து கீழச்சாவடி பங்களா களத்துமேடு வரை 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் சாலையோரம் குடிசை கட்டி கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் தற்போது குடிசைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது சாலையோரத்தில் குடிசையில் வசித்து வருபவர்கள் குழந்தைகள், பெண்களுடன் சொந்த இடமின்றி தவிக்கின்றனர். எனவே இப்பகுதியில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் இலவச மனைப் பட்டா வழங்குவதுடன், அதுவரை தற்போது குடியிருக்கும் இடத்தில் வசிக்க ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக