உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

வாக்காளர் திருத்தப்பட்டியல் சிறப்பு முகாமில் குளறுபடி: எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு

பண்ருட்டி: 

             தி.மு.க., நிர்வாகிகளுக்கு மட்டும் சேர்த்தல், நீக்கம் படிவங்கள் அதிகமாக வழங்கப்பட்டதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு முகாமில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.சி.சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.சி.சம்பத் கூறியதாவது: 

                புதிய வாக்காளர் சேர்ப் பது குறித்து கடந்த 10, 11 ஆகிய இரு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கான படிவம் 6 கிடைக்காமல் பல வாக் காளர்கள் படிவம் 6ஐ ஜெராக்ஸ் மூலம் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.வாக்காளர் படிவம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் பலர் தங் களது பெயர்களை சேர்க்க முடியாமல் போனதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம். ஜெராக்ஸ் படிவத்தை பூர்த்தி செய்தவர்களின் பெயர்களை வாக் காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தனி நபருக்கு மட்டும் படிவம் வழங்குவதாக கூறி ஆளும் தி.மு.க., நிர்வாகிகளுக்கு மட்டும் சேர்த்தல், நீக்கம் குறித்த படிவங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் ஜனநாயக முறைப்படி அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க மீண்டும் சிறப்பு முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.சி.சம்பத் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior