உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

கடலூர் மாவட்டத்தில் சுனாமி நிகழ்ந்து 6 ஆண்டுகள் ஆகியும் வீடுகள் கட்டித்தரவில்லை எனப் புகார்

கடலூர்:

                சுனாமிப் பேரழிவு நிகழ்ந்து 6 ஆண்டுகள் ஆகியும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை என்று கடலூரில் புகார் எழுந்துள்ளது.

கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 100 பேர், அண்மையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனு:

                 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் ஏணிக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். வீடுகள் சேதம் அடைந்தன. அப்போது அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடுகள் வழங்கினர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை.

                 இதுகுறித்து பலமுறை பல அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. மீனவர்கள் பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு ஏணிக்காரன் தோட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. அதிகாரிகள் எங்களைப் புறக்கணிக்கிறார்கள். விரைவில் எங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்காவிட்டால், அரசு அளித்த ரேஷன் கார்டுகள், கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சுனாமி மருத்துவ அட்டை, மின் அட்டை, வீட்டுப் பத்திரங்கள், ஆகியவற்றை அரசிடம் திருப்பிக் கொடுப்போம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலையும் புறக்கணிப்போம். வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி  தொடர் உண்ணாவிரதம் இருப்போம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior