உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

விருத்தாசலம் அருகே மோசமான சாலையால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

விருத்தாசலம் : 

            கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து தேவங்குடி மற்றும் பவழங்குடி செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவ்வழியே செல் லும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின் றனர்.

            விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள தேவங்குடி மற்றும் பவழங்குடி கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேமம், கார் மாங்குடி, வல்லியம், சக்கரமங்களம், சி.கீரனூர், மருங்கூர், காவனூர், கீரமங்கலம், கொடும்பனூர், மேலப்பாலூர், தொழூர் உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளன.

              அனைத்து கிராமத்திற்கும் கருவேப்பிலங்குறிச்சியில் இருந்துதான் செல்ல வேண்டும். இங்கிருந்து மேற்படி கிராமங்களுக்குச் செல்லும் சாலை கடந்த 10 ஆண்டிற்கு முன்பு போடப் பட்டது. தற்போது மிகவும் பழுதடைந்து குண் டும் குழியுமாக போக் குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலையில் இருப்பதால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளனர். பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி ஆம் புலன்ஸ் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சேர முடியாத நிலை உள்ளது.

           பெரும்பாலான நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி பஸ் டயரும் பஞ்சராகி நடுவழியில் நின்று பயணிகள் அவதிக் குள்ளாவதும் வழக்கமாக நடந்து வருகிறது. சற்று வேகமாக சென்றால் கூட ஸ்பிரிங் கட்டாகி விடும் என டிரைவர்கள் மெதுவாக பெண் அழைப்பு வாகனங்கள் செல்வது போல் சீராக செல்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி நேரத் திற்கு சரியாக போய் சேர முடியாத நிலை உள்ளது. மேலும் இவ்வழியாக பெண்ணாடம் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற் பட்ட கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகள், டிராக்டர்கள் செல்வதால் மழைக்காலங்களில் இப்பகுதி சாலைகள் படுமோசமான நிலையில் காணப்படுகிறது.

                   இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைவரும் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior