உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

தனியார் பஸ்களை இயக்க டிரைவர்கள் தட்டுப்பாடு! பஸ் உரிமையாளர்கள் திண்டாட்டம்

கடலூர் : 

            தமிழகத்தில் டிரைவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் பஸ்களை இயக்க முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.

            தமிழகத்தில் 4,500 தனியார் பஸ்கள் வெவ்வேறு சாலைகளில் இயக்கப் பட்டு வருகின்றன. சாலைவரி, டயர் விலை ஏற்றம், டீசல் போன்றவற்றை சமாளிக்க முடியாமல் திணறி வந்த தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மற்றுமொரு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற் போது தனியார் டிரைவர் கள் கிடைக்காமல் அவதிப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 5ம் வகுப்பு தகுதி இருந்தாலே டிரைவர் உரிமம் பெறலாம் என்கிற நிலை இருந் தது. அது 2007ம் ஆண்டு மத்திய அரசு குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப் பாக மாற்றி விட்டது. இதனால் உரிமம் பெறும் டிரைவர்கள் கணிசமாக குறைந்து விட்டனர். வங்கிக்கடன், முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, அரசு உதவித் தொகை போன்றவை எளிதில் கிடைப்பதால் பெரும் பாலான இளைஞர்கள் உயர் கல்வியை நாடும் நிலை உள்ளது.

               மேலும் தமிழகத்தில் 280க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு கல் லூரியிலும் சராசரியாக 20க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இது தவிர சென் னையில் உள்ள ஹூண் டாய், நோக்கியா, போர்டு நிறுவனங்களில் பல நூறு டிரைவர்கள் தேவைப்படுகின்றனர். எளிமையான வங்கிக் கடன், பைனான்ஸ் மூலம் குறைந்த வட்டியில் கிடைப்பதால் பல டிரைவர்கள் ஷேர் ஆட்டோ, டாடா ஏஸ் போன்ற வாகனங்களுக்கு முதலாளிகளாகி விடுகின்றனர். இதனால் தனியார் பஸ்சில் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் கூடுதல் வருவாய் கிடைப்பதோடு சமுதாயத்தில் அந்தஸ்தும் கிடைக்கிறது.

                போதை ஆசாமிகள், தொழில் மீது நம்பிக்கையற்றவர்கள், கிடைத்தது போதும் என் கிற எண்ணத்தில் வரும் சில டிரைவர்கள் லாரிகளில் தொழில் செய்யவே விரும் புகின்றனர். நாளொன்றுக்கு (இரவு பகல்) குறைந்த பட்சம் 1,000 ரூபாய்க்கு மேல் கிடைப்பதாலும், டிராபிக் மற்றும் சிரமம் இல்லாமல் ஓட்டுவதாலும் லாரிகளை விரும்புகின்றனர். ஆனால் தனியார் பஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள் அப்படியல்ல. அதிகாலை எழுந்து டிரிப் எடுக்க வேண்டும், டிராபிக் அதிகம் உள்ள பகுதிகளில்தான் வாகனங்களை இயக்க வேண்டும். குறைந்த ஊதியம், போதையில்லா பணி போன்ற காரணங்களால் தனியார் பஸ்சுக்கு டிரைவர்கள் பணியாற்ற தயங்குகின்றனர்.

                  தற்போதுள்ள சூழ்நிலையில் பஸ் கட்டணம் உயர்த்தாமல் உள்ளதால் பஸ்சை இயக்கவே தனியார் பஸ் உரிமையாளர்கள் திணறி வரும் சூழ் நிலையில் டிரைவர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior