உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

கடலூர் மாவட்டத்தில் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்பயன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

கடலூர் : 

        தீவிரவாதம் மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             மத்திய அரசு தீவிரவாதம் மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற் காக மத்திய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பயன்களை தீவிரவாத மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் பொருட்டு கடலூர் மாவட்டத்தில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட உள்ளது.

              இதனை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்படி பயங்கரவாத வன்முறையில் ஒரு குடும்பத்தில் மரணமடைந்த நபர்களின் எண்ணிக்கை எதுவாக இருப்பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படும். இருப்பினும் குடும்பத்தில் சம்பாதிப்பவர், குடும்பத் தலைவர் ஒருவர் தனித்தனியான சம்பவங்களில் சந்தர்ப்பங்களில் மரணமடைந்தால் நிரந்தரமாக இயலாமையுற்றால் அக்குடும்பத்தினர் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் நிதியுதவி பெறுவதற்கு உரிமையுடையவர். நிதியுதவித் தொகையானது வங்கியில் குறித்த கால இட்டு வைப்பில் குடும்ப உறுப்பினர் பெயரில் இணை அல்லது ஒற்றைக் கணக்கில் வைக்கப்படும்.

                இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கான தகுதியை சரிபார்க்க, மாவட் டக்குழு பரிந்துரைகளை மத்திய அரசின் இணை செயலாளர் உள் விவகாரங்கள் அமைச்சகம் தொகுதி, டில்லி என்ற முகவரிக்கு வரையறுக்கப் பட்ட படிவத்திலும், அதன் நகல் ஒன்றை மாநில அரசின் உள் துறைக்கும் அனுப்பி தகுந்த நியாயத்துடன் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு பரிந்துரைக்கலாம். விண்ணப்பப் படிவங் கள் கலெக்டர் அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்கள் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior