உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

கடலூர் மாவட்டத்தில் இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் 8 பதவிகளுக்கு 19 பேர் போட்டி

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

          கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 55 பதவிகளுக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு எவரும் போட்டியிடவில்லை. எஞ்சிய 8 பதவிகளுக்கு 19 பேர் போட்டியிடுகின்றனர்.

            மாவட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் 48 இடங்களும், ஊராட்சி தலைவர் 3, ஒன்றிய கவுன்சிலர் 1, பேரூராட்சி கவுன்சிலர் 2, நகராட்சி கவுன்சிலர் பதவி ஒரு இடம் என மொத்தம் 55 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான இடைதேர்தல் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 3ம் தேதி துவங்கி 10ம் தேதி முடிந்தது. 12ம் தேதி மனு பரிசீலனை செய்யப்பட்டது. 14ம் தேதி மனுக்களை வாபஸ் பெறப்பட்டு, அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது.

            அதில் 48 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பிரச்னை காரணமாக 6 வார்டுகளுக்கு மனு தாக்கல் நடைபெறவில்லை. மீதமுள்ள 42 வார்டுகளில் 36 வார்டிற்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னபேட்டை ஒன்றிய கவுன்சிலராக பழனியம்மாள் (தி.மு.க), மேல்புவனகிரி பேரூராட்சி 7 வது வார்டிற்கு முத்து என்கிற கோவிந்தசாமி (தி.மு.க), மேல் பட்டாம்பாக்கம் 14வது வார்டு கவுன்சிலராக கோவிந்தசாமி (தி.மு.க), சிதம்பரம் நகராட்சி முதல் வார்டிற்கு தியாகு என்கிற தியாகராஜன் (வி.சி.,) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

              மீதமுள்ள உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளுக்கு இன்று 22ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதில் 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 பேரும், பரங் கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு நான்கு பேரும் போட்டியிடுகின்றனர். கொளப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வழக்கம் போல் தேர்தல் நடக்கவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior