உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

கடலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

           வக்கீல்கள் மீது போலீசார் பதிவு செய்யும் வழக்குகளைக் கண்டித்து கடலூரில் நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

              கடலூர் மாவட்டத்தில் 900க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உள்ளனர். சமீப காலமாக விருத்தாசலம் கதிரவன், பண்ருட்டி செல்வம், கடலூர் முருகன் உள்ளிட்ட வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த அணுகு முறையை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும் நேற்று கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோர்ட் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பத் தலைமை தாங்கினார். வேதநாயகம், தமிழரசன் முன்னிலை வகித்தனர். தங்கராஜ், மாசிலாமணி, கண்ணன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.

               பின்னர் மாவட்ட வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனுவை கலெக்டர், எஸ்.பி., மாவட்ட நீதிபதி ஆகியோர்களிடம் அளித்தனர். முன்னதாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதையொட்டி கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வக்கீல்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் வாபஸ் பெறப்பட்டனர். 

திட்டக்குடி: 

               மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் தங்க கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் முத்தழகன், பொருளாளர் கென் னடி முன்னிலை வகித்தனர். மணிவண்ணன், பாலசுரேந்திரன், கலைச் செல்வன், இளஞ்செழியன் உட்பட பலர் பங் கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior