உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

புழுதிப்புயல், கொசுக்கடியில் அவதிப்படும் கடலூர் நகர மக்கள்

கடலூர் : 

            கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணி தீவிரமடைந்துள்ளதால் பகலில் புழுதிப் புயலிலும், இரவில் கொசுத் தொல்லையிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

              கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடைத்திட் டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது நெல்லிக்குப்பம் சாலை, ஜட்ஜ் பங்களா ரோடு, பீச் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்ட கம்மியம் பேட்டை, போடி செட்டித் தெரு, மாரியம்மன்கோவில் தெரு, அக்கிள் நாயுடு தெரு உள்ளிட்ட தெருக்களில் பள்ளம் இதுவரை மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அண்மையில் பெய்து வரும் மழை காரணமாக சாலையில் கிடக்கும் மண் மேடுகள் சகதியானது. அது காய்ந்த வெயிலில் உலர்ந்து வாகனங்கள் செல்லும் போது நகரமெங்கும் புழுதிப் புயலாக காட்சி தருகிறது. இதனால் கடலூரில் பயணம் செய்பவர்கள் சுவாச கோளாறினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

                 இது ஒரு புறம் இருக்க, கழிவு நீர் கால்வாய் அடைபட்டு தண்ணீர் தேங்கி நிற்பதாலும், கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையினாலும் ஏற்கனவே பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சிறு சிறு பள்ளங்களில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் இரவு பகல் எல்லா நேரங்களிலும் கொசுக்கடியில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாதாரணமாக மாலை நேரத்தில் நின்று பேசவோ, நிற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியும் கொசு மருந்தை தெளிப்பதை சிக்கனப்படுத்தியதாலும் கொசுக்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior