உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் சுய உதவிக்குழுவிற்கு வழங்கிய மினி வேன் விறகு வைக்கப்பயன்படுத்தும் அவலம்

பண்ருட்டி :

           மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய டாடா ஏஸ் மினி வேன் பராமரிப்பின்றி விறகு வைக்க பயன்படுத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் 11 மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளனர். இக்குழுவினர் இயற்கை மண்புழு உரம், கிளீனிங், வாஷிங் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவை தயார் செய்தனர்.

            இக்குழுவை ஊக்கப்படுத்த அரசு சார்பில் வங்கிக் கடன், பேக்கிங் மிஷின், காகித மிஷின் உள்ளிட்டவைகள் மானியத்தில் வழங்கப்பட்டது. தற் போது அனைத்தும் பயன் படுத்தாமல் வீணடிக்கப் பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் தயாரிக்கும் பொருட்களை மாவட்ட முழுவதும் விற்பனை செய்ய கடந்த 2006-07ம் ஆண்டில் சந்தைப்படுத்துதல் திட்டத் தின் கீழ் 2 லட்சத்து 62 ஆயிரத்து 746 ரூபாய் மதிப்பிலான டாடா ஏஸ் மினி வேன் வழங்கப்பட்டது.

                  இந்த வேனை மகளிர் சுய உதவி கூட்டமைப்பு தலைவர் சரஸ்வதி மேற் பார்வையில் வாடகைக்கு விடப்பட்டது. பின் கடந்த 6 மாதங் களாக மினி வேன் பராமரிப்பு இல்லாமல் வாகன வரி செலுத்தாமல் வாகனத்தில் விறகு வைத்துள்ளனர். மகளிர் திட்ட அதிகாரிகள் மகளிர் குழுக்களுக்கு வழங்கும் கடன் தொகை முறையாக சேருகிறதா? குழுக்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள் ளதா என்பதை ஒவ்வொரு மாதமும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

              மகளிர் குழுக்கள் செயல் பாடுகளில் தொய்வு ஏற்படும் போது அவர்களை ஊக்கப்படுத்தி அரசு திட்டங்களை விரைவாக செயல்படுத்த அதிகாரிகள் முன் வரவேண்டும். அப்படி ஊக்கப்படுத்தாததால் மாவட்டத்தில் சிறந்த மகளிர் கூட்டமைப்பாக செயல்பட்ட கணிசப்பாக்கம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிய டாடா ஏஸ் மினிவேன் உள்ளிட்ட பொருட்கள் வீணாகி வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior