சிதம்பரம் மேலவீதி பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையும், அதற்கு முன் பஸ்ஸில் ஏற அச்சத்துடன் நிற்கும் பெண்களும்.
சிதம்பரம்:
சிதம்பரம் மேலவீதி பஸ் நிறுத்தத்தின் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையினால் பொதுமக்கள், குறிப்பாக மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சிதம்பரம் மேலவீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் எம்பி ஏ.பொன்னுசாமி மெகா பஸ் நிறுத்தத்தை அமைத்தார். பல்வேறு கிராமங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள், மாணவ, மாணவியர் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ்களில் ஏறிச் செல்வது வழக்கம்.
இந்த பஸ் நிறுத்தத்தின் உள்ளே டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த மதுபானக்கடையில் குடிக்க வருபவர்கள் மதுபாட்டில்களை வாங்கி அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டிலை உடைத்துவிட்டு சென்று விடுகின்றனர். ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர். எச்சில் துப்பி சீர்கேட்டை உருவாக்குகின்றனர். இதனால் இந்த பஸ் நிலையத்தில் நின்று பஸ் ஏற பெண்கள் பயப்படுகின்றனர்.எனவே பஸ் நிறுத்தத்தில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என அக்னிசிறகுகள் இயக்கத் தலைவர் ஆ.குபேரன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக