கடலூர் :
பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழுமம் சார்பில் கடலூரில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பரிசு வழங்கினார்.
பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழுமம் சார்பில் கடலூர் மற்றும் புதுச்சேரி தொலைபேசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான இறகு பந்து மற்றும் நீச்சல் போட் டிகள் நேற்று முன்தினம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது. இரண்டு நாள் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை பொது மேலாளர்கள் கடலூர் ஜெயந்தி அபர்ணா, புதுச்சேரி முரளி கிருஷ்ணா, உதவி பொது மேலாளர் இளங்கோவன், குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழும செயலாளர் அன்பழகன் வரவேற்றார்.இறகுபந்து மற்றும் நீச்சல் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பரிசு வழங்கினார். குழும பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை குழும இணை செயலாளர்கள் செந்தில்குமரன், ரகு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக