உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

11-ம் தேதி கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கலாம்

சிதம்பரம்:

        சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் முடித்த பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதி கீழணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்கலாம் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

           கீழணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கருத்து கேட்புக்கூட்டம் சிதம்பரம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். 

               கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி, உதவி செயற்பொறியாளர்கள் (கீழணை) பி.பெரியசாமி, எஸ்.கலியமூர்த்தி (சிதம்பரம்), கீழணை பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை, நாரைக்கால் ஏரி பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன், பாசிமுத்தான்ஓடை பாசன விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாய சங்கத் தலைவர் கே.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

அதன் விவரம்:

            சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி முடிந்த பின்னர்தான் தண்ணீர் திறக்க முடியும். பணி எப்போது முடிவுறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர்தான் தண்ணீர் திறக்கும் தேதியை முடிவு செய்ய வேண்டும் என நாரைக்கால் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கோட்ட செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் தூர்வாரும் பணி முடிக்கப்படும் என தெரிவித்தார். தூர்வாரும் பணிகள் முடிவுற்றால் ஆகஸ்ட் 11-ம் தேதி கீழணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடலாம் என அனைத்து விவசாய பிரதிநிதிகளும் கருத்து தெரிவித்தனர். 

வீராணத்தில் முழுக் கொள்ளளவு நீர்: 

              வீராணம் ஏரியில் முழுக் கொள்ளளவு நீர் தேக்கினால்தான் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் வெள்ளாறு மூலம் நீரை தொடர்ந்து பெற்று சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே வீராணத்தில் முழுக்கொள்ளளவு நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.விஜயகுமார் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior