உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

கடலூர் மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பணியிடை பயிற்சி

கடலூர்:

           தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நவீன கருவிகள் கையாள்வது மற்றும் பராமரித்தல் குறித்த இரண்டு நாள் பணியிடைப் பயிற்சி நேற்று துவங்கியது.

            கடலூர் மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களில் 246 பேர் பணியாற்றி வருகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு காலத்திற்கேற்ப தீயணைப்பு மற்றும் மீட்புக் கருவிகள் வழங்கி அவற்றை கையாள்வது, பராமரிப்பு குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 
                கடலூர் தீயணைப்பு நிலையத்தில் இரண்டு நாள் பணியிட பயிற்சி நேற்று துவங்கியது. கடலூர் உதவிக் கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நிலைய அலுவலர்கள் குமார், வெங்கடேசன், சீனுவாசன், ஆறுமுகம், செந்தில் ஆகியோர் யோகா, மனவளக்கலை மற்றும் நவீன கருவிகளை கையாள்வது குறித்த பயிற்சியும் அளித்தனர். மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து 94 வீரர்கள் பங்கேற்றனர். மற்றவர்கள் இன்று பங்கேற்கின்றனர். 

             மேலும் அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் வெள்ள காலங்களில் சாலைகளிலும், வீடுகளிலும் மரங்கள் விழுந் தால் கிளைகளை அறுத்து அப்புறப்படுத்த மோட்டார் பொருத்தப்பட்ட வாள், வெள்ள காலங்களில் மீட்பு பணிக்கு பயன்படுத்த ரப்பர் படகு, இரவு நேரங்களில் பயன்படுத்த ஒளி உமிழும் கோபுர விளக்கு, உடை, சாலை விபத்துகளில் மீட்பு பணிக்காக ரோப் பிளாக், ஆக்சிஜன் கிட், 10 ஆயிரம் "ஓல்ட்டேஜ்' மின்சாரத்தை தாங்கக் கூடிய நவீன ரக "ஷூ' உள்ளிட்ட பல்வேறு கருவிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளது.

                 கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 100 தீயணைப்பு அழைப்புகளுக்கு மேல் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு கூடுதலாக வாகனங்களும் கடலூருக்கு 20 லட்சம் மதிப்புள்ள அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அவசர கால மீட்பு ஊர்தி வழங்கப்படவுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior