உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

கடலூர் மாவட்டத்தில் முழுமையாகத் தூர் வாராததால் 20 கிராமங்கள் பாதிப்பு

கடலூர்:

            மூன்று கி.மீ. தூரம் உள்ள முரட்டு வாய்க்காலை, முழுமையாகத் தூர் வாராததால் 20 கிராமங்களில் மழைக் காலங்களில் வெள்ளம் வடியாமல், பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் இரா.தமிழ்வளவன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:  

              வயலாமூர் முரட்டு வாய்க்கால் எனும் பாசன, வடிகால் வாய்க்கால் 2004-ம் ஆண்டு வேலைக்கு உணவுத் திட்டத்தில் தூர்வாரப்பட்டது. அதனால் வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் இருப்பதால், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயில் என்ஜின் வைத்து வாய்க்காலில் இருந்து நீரை இறைத்துப் பாசனம் செய்து வந்தனர். 7 ஆண்டுகளுக்குப் பின், தற்போது 10 நாள்களுக்கு முன், வயலாமூர் முரட்டு வாய்க்கால் தூர்வாரப்பட்டது. ஆனால் வடிகால் முழுவதும் தூர்வாரப்படவில்லை. 3 கி.மீ. தூரத்தில் ஒரு கி.மீ. தூரம் மட்டுமே தூர்வாரப்பட்டு உள்ளது. 

              இதனால் மழைக் காலத்தில் வெள்ளம் வடியாமல், வயலாமூர், பூவாலை, சித்தேரி, தெற்குத்திட்டை, வடக்குத் திட்டை, கீழமணக்குடி, சாத்திப்பட்டு, குரியாமங்கலம் உள்ளிட்ட 20 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது. அரசு நிதி ஒதுக்கியும், விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இப்பணியால், முரட்டு வாய்க்கால் பாசனத்துக்கும் வடிகாலாகவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இவ்வாய்க்காலை முழுமையாகத் தூர்வாரி இருந்தால், விவசாயிகள் பரவனாற்று நீரைப் பயன்படுத்தி, ஆயில் என்ஜின் மூலம் நீர் இறைத்து நெல் விதைவிட்டு இருப்பார்கள். வடிகால் முழுமையாகத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior