சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சுவர்கள், பாலங்களில் விளம்பரம் எழுதியும் போஸ்டர் ஒட்டியும் அசுத்தம் செய்வதை தடுக்க ஓவியங்களை வரைந்து அசத்தி வருகின்றனர்.
பாலங்கள், சுவர்களைப் பார்த்து விட்டால் நம்ம ஊர் அரசியல் கட்சியினர் முதல் பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் வரை அனைவரும் போஸ்டர் ஒட்டியும், விளம்பரம் எழுதியும் அசுத்தம் செய்து விடுவர். இதனைத் தடுக்க, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான காம்பவுண்டு சுவர்கள், பாலங்களின் தடுப்பு சுவர்களில் வண்ண ஓவியங்களை வரைந்து "புது டெக்னிக்'கை கையாண்டு வருகின்றனர். சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் பழங்கால வரலாற்றுக் கதைகளை நினைவு கூறும் வகையில் ஓவியங்களை நேர்த்தியாக வரைந்து வருகின்றனர். அதேப்போன்று சிதம்பரநாதன்பேட்டை பாலத்திலும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அலுவலக சுவர்களில் திருக்குறள் எழுதி வைக்கப் பட் டுள்ளது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை அலுவலக காம்பவுண்டு சுவரில் ஒட்டப்பட் டிருந்த போஸ்டர்கள் அதிகாரிகள் முன்னிலையில் கிழித்தெறியப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது. பின்னர் சுவர் முழுவதும் விளம்பரங்கள் செய்ய முடியாத வகையில் திருக்குறள் எழுதி வைத்துள்ளனர். இதனால் தற்போது அந்த சுவர்கள் பார்ப்பதற்கு "பளீச்'சென காணப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக