உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

நெய்வேலியில் உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம்

நெய்வேலி:
 
          நெய்வேலியில் உள்ள இந்திய மருத்துவக் குழுமம் சார்பில் உலகத் தாய்ப்பால் வாரவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 
           உலகத் தாய்ப்பால் வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நோக்கம் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது எனவும் தாய்மார்கள் பிறந்த குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பதை தவிர்த்து, தாய்ப்பாலையே முழுமையாக கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது. நெய்வேலியில் இந்திய குழந்தை மருத்துவக் குழுமம் சார்பில் வட்டம் 26-ல் உள்ள என்எல்சி உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
 
                இவ்விழாவை ஒட்டி பொதுமக்களிடையே தாய்ப்பாலை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவ,மாணவியர் பேரணியை என்எல்சி கல்வித்துறை மேலாளர் ஜோதிக்குமார் தொடங்கி வைத்தார். என்எல்சி மருத்துவனையின் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மருத்துவர் செந்தில், தாய்ப்பாலை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். விழாவில் ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், விப்ஸ் அமைப்பினர், ஜேசீஸ் மகளிர் பிரிவு உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior