கடலூர்:
தி.மு.க. புதன்கிழமை நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு, இளைஞர் அணியினர் திரளாக வர வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. செயலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கை விரைவுப்படுத்த வலியுறுத்தி தி.மு.க. சார்பில் புதன்கிழமை, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக, தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில்,
"4-ம் தேதி கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற இருக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து, இளைஞர் அணியினர் உள்ளிட்ட தி.மு.க. துணை அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும், திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைச் சிறப்பாக நடத்திய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தும் மற்றும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைச்செல்வம் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் கணேசன், ஒன்றியச் செயலர் சிவகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜேம்ஸ்விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.÷குறிஞ்சிப்பாடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக