உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க வாக்கெடுப்பு வேலைநிறுத்தத்துக்கு 5570 பேர் ஆதரவு

நெய்வேலி:

          என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தொழிலாளர்களிடம் ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில் வாக்கெடுப்பு நடத்தியது ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்.

             இந்த வாக்கெடுப்பில் 5570 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 5741 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக கடந்த 2008-ம் ஆண்டு புதுதில்லியில் மத்திய அமைச்சர் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.÷அதன் தொடர்ச்சியாக நிர்வாகம் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் மருத்துவப் புத்தகம், போனஸ், தொழிலாளர்களின் பணிமூப்புப் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளது.

            இந்நிலையில் அவர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து பகுதிவாரியாக ஜூலை 30 மற்றும் 31-ம் தேதிகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து சங்கத்தின் உயர்மட்டக்குழுக் கூடி முடிவெடுக்கும் என்றார் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior