உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

தீபாவளி: ரயில் டிக்கெட் முன்பதிவு தீவிரம்

              தீபாவளி பண்டிகைக்கு (நவம்பர் 5) செல்ல, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

           ரயில்களில் பயணம் செய்ய பொதுவாக 90 நாள்களுக்கு முன்பே  டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இப்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னமும் 94 நாள்கள் உள்ளன. இந்நிலையில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, பொதிகை, நெல்லை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், கோவை, இன்டர்சிட்டி, நீலகிரி உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களிலும் தீபாவளிக்கு 5 நாள்கள் முன்பிருந்தே பயணம் செய்யும் வகையில் இரு மார்க்கங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.  

                 இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கடற்கரை,  உள்ளிட்ட பல்வேறு முன்பதிவு மையங்களில் நெரிசல் அதிகரித்துள்ளது. இணையதளம் மூலம் இ-டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் பயணிகள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வெள்ளிக்கிழமை வருவதால், சனி, ஞாயிறு என விடுமுறை நாள்கள் 3 நாள்களை எட்டும் என்பதால் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பயணிகள் அதற்கேற்ப தங்களது தீபாவளி பயணத்தை திட்டமிட்டுள்ளனர்.

பறக்கும் படை கண்காணிப்பு:

               ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு செய்யும் போலி முகவர்களை தடுக்க ரயில்வே கண்காணிப்புத் துறை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸôர் இணைந்த பறக்கும் படைகளை அமைத்து கண்காணிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.தீபாவளி சிறப்பு ரயில்கள்: இதே போல ஒட்டுமொத்தமாக தீபாவளி சிறப்பு ரயில்களை அறிவிக்காமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவிப்பதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கவும், அனுமதி பெற்ற முகவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கீடு செய்யும் புதிய முறையையும் தெற்கு ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior