கடலூர்:
பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட மீனவர் கிராமங்களுக்கு கூடுதல் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று, வியாழக்கிழமை நடந்த கடலூர் மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் அதன் தலைவர் இரா.சிலம்புச் செல்வி வலியுறுத்தினார். மீனவர் பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரம் மற்றும் கடலூர் இடையே இயக்க அனுமதி அளிக்கப்பட்ட பஸ்கள் பலவும், பரங்கிப்பேட்டை வழியாகச் செல்வது இல்லை. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பயணிக்கவும் மீனவர்கள் பிடிக்கும் மீன்களை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லவும் கூடுதல் பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க வேண்டும் என்றும் சிலம்புச்செல்வி கேட்டுக் கொண்டார்.
உறுப்பினர் ப.சண்முகம் பேசுகையில்,
""ஆகஸ்ட் 25-ம் தேதி சிப்காட் பகுதி கிராம வாய்க்கால்களில், ரசாயனத் தொழிற்சாலைகள் ஆலைக் கழிவுகளைத் திறந்து விட்டனர். அந்தத் தண்ணீரைக் குடித்த மாடுகள் செத்தன. விளைநிலங்கள் வீணாகி விட்டன. ஆனால் எந்த ரசாயன ஆலையில் இருந்து, இந்தக் கழிவுகள் திறந்து விடப்பட்டன என்ற விவரத்தை, இதுவரை மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்டிபிடித்து அறிவிக்கவில்லை.
இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் மீது பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் நிலைக் குழுக்களில் நான் 4 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தும், இரு துறைகளின் எந்தத் திட்டமும் விவாதிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்து அறியப்படவில்லை'' என்றார் சண்முகம். மற்றும் பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் பகுதி குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக