கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சி குன்றியோருக்கு மாதம் ரூ. 500 வீதம் 1200 பேருக்கு 10 மாதத்துக்கான உதவித் தொகை ரூ. 60 லட்சத்தை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.
மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகம் சார்பில் மன வளர்ச்சி குன்றியோருக்கு மாதம் ரூ. 500 வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 1200 பேருக்கு 10 மாதத்துக்கான தொகை ரூ. 60 லட்சத்தை மனுதாரர்களுக்கு மணியாடர் மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார். கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து, இன்று வரை நிலுவையில் இருந்த அனைத்து மனுக்களுக்கும் மணியார்டர் மூலம் உதவித்தொகை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் ஊனமுற்றோர் 15 பேருக்கு 3 மாத இலவச செல்ஃபோன் பயிற்சிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். இதற்கு உதவித் தொகையாக மாதம் ரூ. 300 வீதம் ஒவ்வொருவருக்கும் 3 மாதங்களுக்கு ரூ. 900 வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணம் ஒவ்வொரு நபருக்கும் ரூ. 3 ஆயிரம் வீதம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக