அணைக்கட்டு:
விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிப்சம் வழங்கப்படும் என்று அணைக்கட்டு வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவக்குமார்சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
அணைக்கட்டு வட்டாரத்தில் இரவை மணிலா பயிர் செய்யப்பட்டு வருகிறது. மணிலாவில் களையெடுக்கும்போது ஜிப்சம் போட்டால் பயிர் நன்றாக இருக்கும்.
இதற்காக விவசாய துறை சார்பில் அணைக்கட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐசோபாம் எண்ணெய் வித்து மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் ஒரு எக்டேருக்கு 400 கிலோ வீதம் வழங்கப் படுகிறது. எனவே விவசாயிகள் வாங்கிச் சென்று அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு சிவக்குமார்சிங் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக