ஸ்ரீமுஷ்ணம் :
ஸ்ரீமுஷ்ணம் ஜெயந்தி பத்மநாபா கல்லூரி நிறுவனங்கள் சார்பில் வரும் 19ந் தேதி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து கல்வி நிறுவனங்களின் செயலாளர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது
ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் புவி வெப்பமயமாதல் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துவது பற்றி கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி வரும் 19ம் தேதி நடக்கிறது.இதில் ஜெயந்தி பத்மநாபா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் 600 பேர் இயற் கையில் விளைந்த தானியங்களை வைத்து ஆயிரத்து ஐநூறு சதுர மீட்டர் தூரத்திற்கு ஓவியம் வரைந்து உலக சாதனை நிகழ்த்த உள்ளனர்.இ துகுறித்து கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனத்தினர் இந்த சாதனையை நிகழ்த்துகின்றனர். மேலும் உலகிலேயே விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த முதல் சாதனை நிகழ்ச்சியாகவும் அமையும். கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிக்கு பிறகு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு பிரகாஷ் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக