கடலூர் :
கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தேசிய தர நிர்ணய குழு பரிந்துரையின் பேரில் 10 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் 24 மணிநேரமும் இயங்க கூடிய "சென்ட்ரலைஸ்டு ஆக்சிஜன் சப்ளை' அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் அரசு பொது மருத்துவமனையில் போதுமான கட்டட வசதிகள் இருந்தும் முக்கிய பிரிவுகளுக்கு டாக்டர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் "வீக்' காக இருந்து வருகிறது. மருத்துவமனையை தேசிய தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற் காக தேசிய தர நிர்ணய குழு அதிகாரிகளை நியமித்து மருத்துவமனையை ஆய்வு செய்து படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போன்று "சென்ட் ரலைஸ்டு ஆக்சிஜன் சப்ளை' அமைக்கும் பணி நேற்று துவங்கியது. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில "சென்ட்ரலைஸ்டு ஆக்சிஜன் சப்ளை' மூலம் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, தீவிர குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பைப் மூலம் நேரடியாக அந்தந்த வார்டுகளுக்கு 24 மணிநேரமும் இயங்கும் நிலையில் "ஆக்சிஜன்' கொண்டு செல்லப்படும்.இதன் மூலம் நோயாளிகள் படுகையின் மேல் புறத்தில் உள்ள குழாய் இணைப்பிலிருந்து "ஆக்சிஜன்' செலுத்தப்படும். இப்பணி 10 நாட்களுக்குள் முடிக்கப்படும் என தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக