கடலூர் :
கடலூரில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 1,200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்ட ஊனமுற்ற மற்றும் மறுவாழ்வு அலுவலகம் சார்பில் மனவளர்ச்சி குன்றிய 1,200 பேருக்கு மாதம் 500 ரூபாய் வீதம் 10 மாதத்திற்கான தொகை 60 லட்சம் ரூபாய்க்கான பணவிடைகளை (மணியார்டர்) கலெக்டர் சீத்தாராமன் மனுதாரர்களுக்கு வழங்கினார். மேலும் 15 ஊனமுற்றவர்களுக்கு 3 மாத மொபைல் போன் பயிற்சிக்கான ஆணையை வழங்கினார்.உதவித் தொகையாக மாதம் 300 ரூபாய் வீதம் 3 மாதத்திற்கு 900 ரூபாய் வழங்கப்படும் என்றும் மேலும் பயிற்சிக்கான கட்டணத் தொகை நபர் ஒன் றுக்கு 3,000 ரூபாய் வீதம் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மூலம் செலுத்த கலெக்டர் உத்தரவிட்டார். மாணவி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், தாட்கோ மூலம் தனி நபர் கடன் வழங்கும் திட்டத் தின் கீழ் 2 பேருக்கு சோடா மூடி செய்யும் கம்பெனிக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் திட்ட தொகையாக 1 லட்சமும், டயர் வண்டிக்காக 20 ஆயிரம் ரூபாய மானியத்திற்குரிய ஆணையை கலெக்டர் வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக