உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

கடலூர், விழுப்புரத்தில் விரைவில் '3 ஜி' சேவை என்.எப்.டி.இ., சம்மேளன பொருளாளர் தகவல்

திட்டக்குடி : 

                 கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விரைவில் "3 ஜி' சேவை செயல் படுத்தப்படும் என என். எப்.டி.இ., சம்மேளன மாநில பொருளாளர் ஜெயராமன் தெரிவித்தார். பெண்ணாடத்தில் 

அவர் கூறியதாவது:

         தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல்., சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டவர்கள் செயல்பாடின்றி உள்ளதால் குடியிருப்புகள், வியாபார நிறுவனங்களுக்குள் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை. பி.எஸ்.என்.எல்., சேவையை வாடிக்கையா ளர்கள் அதிகமாக பயன்படுத்துவதால் மொபைல்களில் "சிக்னல் டிராபிக்' ஏற்படுகிறது.கேபிள் பழுதினால் பிராட்பேண்ட் சர்வீசிலும் சிக்கல் ஏற்படுகிறது. பிராட்பேண்ட் இணைப் புக்கு விண்ணப்பத்துள்ள அனைவருக்கும் உடனடியாக இணைப்பு வழங்கவும், பழுதுகளை நீக்கவும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மற்றும் கடலூரில் வரும் 24ம் தேதி நடக்க உள்ளது.

              தஞ்சையில் வரும் மார்ச் 7, 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களை தக்க வைப்பது, அதிகரிக்க செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். புதுடில்லி, மும்பை, சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் "3 ஜி' சேவை கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இரண்டு மாதத்திற்குள் கொண்டு வரப்படும். பயன்பாட்டிலுள்ள "2 ஜி' சேவையே பழுதுகள் காரணமாக தடை ஏற்பட்டு வரும் நிலையில், அதிக வசதிகள் கொண்ட "3 ஜி' சேவையை வாடிக்கையாளர்கள் நிறைவாக செயல்படுத்திட நிர்வாகத்திற்கு எடுத்துரைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை வியாபார நோக்கோடு மட்டுமே பயன்படுத்தும் நிலையில், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., வளர்ச்சியை அதிகப்படுத்திட முயற்சிக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior