கடலூர் :
ஏழை பெண்கள் பத்தாம் வகுப்புவரை படிக்க வழி செய்தவர் முதல்வர் கருணாநிதி என எம். எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் சேவை இல்லத்தில் சமுக நலத்துறை சார்பில் 93 பேருக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமணம் உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.சேர்மன் தங்கராசு முன் னிலை வகித்தார். மாவட்ட சமுக நல அதிகாரி புவனேஸ்வரி, கண்காணிப்பாளர் விஸ்வநாதன், கவுன்சிலர்கள் நவநீதம், இளங்கோவன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய 93 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கிய எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது:
வறுமையின் காரணமாக பெண்கள் படிக்க முடியாத நிலையை போக்கிடும் பொருட்டு முதல்வர் கருணாநிதி, 8ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை ஐந்தாயிரம் ரூபாய் அறிவித்தார். பின்னர் அதனை 10ம் வகுப்புவரை உயர்த்தி 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார். தற்போது 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகிறார். இதன் மூலம் ஏழை பெண்கள் பலர் பள்ளி படிப்பை முடித் துள்ளனர் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக