உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

மீன் வள உற்பத்தியில் தமிழகம் 4ம் இடம் மண்டல இயக்குனர் தகவல்

கடலூர் : 

               ஆழ்கடல், தூர கடலில் உள்ள சுறா மற்றும் சூரை மீன்களை பிடிக்க மீனவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மீன் வள அளவைத் தளம் சென்னை மண்டல இயக்குனர் ஆன்ரோஸ் பேசினார். கடல் மீன் வளம் குறித்த ஒரு நாள் கருத்தாய்வு கடலூர் முதுநகர் மீன்வளத்துறை அலுவலகத் தில் நடந்தது. உதவி இயக்குனர் இளம்பரிதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீனவர் வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி முன் னிலை வகித்தார். முதுநிலை மீன் வள விஞ்ஞானி பரசுராமன் வரவேற்றார். 

மீன்வள அளவைத் தளம் சென்னை மண்டல இயக்குனர் ஆன்ரோஸ் பேசியதாவது:

                     இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளில் மீன் வளம் 3.92 மில்லியன் டன்களாக கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 3.01 மில்லியன் டன் மீன்கள் பிடிக் கப்படுகின்றன.கடலில், 50 முதல் 100 மீட்டர் ஆழம் உள்ள பகுதிகளிலேயே தற் போது அதிகளவில் மீன்கள் பிடிக் கப்படுகின்றன.

                    மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்திய கடல் பகுதியில் மீன் வளத்தை பாதுகாப்பது இதுவே சரியான நேரம். தூர கடலில் உள்ள சூரை மீன்கள், ஆழ்கடலில் உள்ள சுறா மீன்களை பிடிப்பதில் மீனவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.தமிழகத்தில் 1,076 கி.மீ., நீளமுள்ள கடற்கரை பகுதியில் 41,412 சதுர கி.மீ., கடற்பரப்பு உள்ளது. மீன் வள உற்பத்தில் தமிழகம் நான்காவது இடத்தில் உள் ளது.பாறை மீன் வளங்கள் கண்டறிய நடத்திய ஆய்வில் மகாபலிபுரம், கோவளம், புதுச்சேரி கடற்பகுதிகளில் 30 முதல் 150 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது. நாகை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 240 முதல் 420 மீட்டர் ஆழம் உள்ள பகுதிகளில் இறால்கள் அதிகமாக கிடைக்கின்றன. ஓடு கயிறு, மீன்பிடிக்கும் முறை, தூண்டில் முறைகள் மூலம் கனவாய், சூரை, சுறா மீன்களை பிடித்து கூடுதல் வருமானம் பெறலாம்.கடலூர் கடல் பகுதிகளில் பாறை மீன்கள், கனவா மீன்கள் பிடிக்க பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் உகந்தவையாகும். இவ்வாறு மண்டல இயக்குனர் பேசினார்.சூரை மீன்கள் பிடித்தல், சுற்றுச் சூழலுக்குட்பட்ட மீன் பிடித்தல், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மீன் வளத்துறை விஞ்ஞானிகள் ஜெயச்சந்திரன், பாபு உள்ளிட்டோர் விளக்கினர்.இளநிலை விஞ்ஞானி நாகராஜன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior