கடலூர் :
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று 200 டன் மத்தி மீன்கள் பிடிபட்டன. கடலூர் மாவட்டத்தில் தற்போது மீன்பிடி சீசன் துவங்கியுள்ளது. சூரை, கானாங்கத்த, கெளுத்தி மீன்கள் அதிகம் கிடைக் கின்றன. சூரை, கானாங் கத்த உள்ளிட்ட மீன்கள் உள்ளூர் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் தினமும் 100 முதல் 200 டன் மத்தி மீன் கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றை உள்ளூர் வியாபாரிகள் கொள்முதல் செய் கின்றனர். கருவாடு தயாரிக்க வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி கோழி தீவனத்திற்காக நாமக்கல், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஒரு கிலோ மத்தி கருவாடு, 18 முதல் 19 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் கடலூர் துறைமுகத்தில் 200 டன் மத்தி மீன்கள் பிடிபட்டன. பாக்ஸ் (70 கிலோ) 400 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெயிலில் உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் வரை மத்தி மீன் சீசன் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக