உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஐ.நா. குழு 31-ல் பார்வையிடுகிறது

கடலூர்:
        கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்புக் கண்காணிப்பாளர் குழு 31-ம் தேதி பார்வையிடுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியற்றின் பிரதிநிதிகளையும் இக்குழு சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிகிறது. ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆலிவர் ஷட்டர் மற்றும் அவரது குழுவினர் 31-ம் தேதி கடலூர் வருகிறார்கள். அவர்களது நிகழ்ச்சிகளை இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் த.குருசாமி தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள்.
              31-ம் தேதி காலை 8-30 மணி முதல் 9 மணி வரை கடலூர் டவுன்ஹாலில், ஐ.நா. சபைக் குழுவிடம் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பாதுகாப்பில் ஏற்பட்டு உள்ள பின்னடைவு குறித்து இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு விளக்கம் அளிக்கிறது. பகல் 12 மணி வரை, சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகிலிருக்கும்   குடிகாடு, ஈச்சங்காடு, காரைக்காடு, சங்கொலிக்குப்பம், செம்மங்குப்பம் கிராமங்களில் மக்களைச் சந்தித்து கருத்துக்களை கேட்டறிகிறது. பகல் 12-30 முதல் மாலை 4-30 வரை, கடலூர் டவுன்ஹாலில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள், சிப்காட் முகவர்கள் ஒப்பந்ததாரர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், செய்தியாளர்கள் ஆகியோரை இக்குழு சந்திக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாகிய உணவு, தண்ணீருக்கான உரிமை, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகள் தொழில்மயம் என்ற பெயரால் எவ்வாறெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை களப்பார்வையிடல் மூலம் அறிந்து ஐ.நா.சபைக்கு தெரிவிக்கும் முயற்சி இதுவாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior