உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகளிடையே போட்டா போட்டி! : சாலை விரிவாக்கம், மின்கம்ப பணிகள் பாதிப்பு


பண்ருட்டி : 

               பண்ருட்டி பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் அகற்றுவதில் சிக்கல்  நீடித்து வருவதால் நெடுஞ்சாலைகள் விரிவாக்க பணி தேக்கமடைந்துள்ளது.
 
                பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் பண் ருட்டி ஒன்றியம் அலுவலகம் - முத்துநாராயணபுரம் வரையிலான 5 கி.மீ., சாலையை 2.30 கோடி ரூபாய் செலவில் 7 மீட்டர் அகலத்திற்கு விரிவுப்படுத்தும் பணி துவங்கப்பட் டுள்ளது. அதேபோன்று வல்லம்-கீழிருப்பு 3 கி.மீ., சாலை 37 லட்சம் ரூபாய் செலவிலும், மேலிருப்பு-ஆத்திரிக் கப்பம்-பேர்பெரியான் குப்பம் 8 கி.மீ., சாலை ஒரு கோடி ரூபாய் மதிப்பிலும், காடாம்புலியூர்-சிலம்பிநாதன் பேட்டை 9.4 கி.மீ., சாலை ஒரு கோடியே 16 லட்சம் செலவிலும் அகலப்படுத்தும் பணி துவங்கப் பட்டுள்ளது.
 
                    இந்த சாலைகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் பல இடங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்ற பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மின்வாரிய செயற் பொறியாளருக்கு நடவடிக்கை எடுக்க கடந்த செப்டம்பர் மாதம் கடிதம் அனுப்பினார். விண்ணப்ப கட்டணம் செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின், மின்கம்பம் மாற்றுவதற்குரிய திட்டமதிப்பீடு வழங்காமல் மின் வாரியம் அலட்சியம் செய்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  மின்கம்பங்கள் உள்ளபகுதிகளை தவிர்த்து சாலை அகலப்படுத்தும் பணியை கடந்த ஒரு மாதமாக செய்து வருகின்றனர்.
 
                மேலும், இனி வரும் காலங்களில் நெடுஞ்சாலைத்துறையின்    அனுமதியின்றி மின் கம்பங்கள் நடக்கூடாது என கோட்ட பொறியாளர் வெங்கடேசன்  மின்வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து செம்மேடு, வாணியம்பாளையம், பண்டரக் கோட்டை உள்ளிட்ட பகுதியில் டிரான்ஸ்பார்மர், மின்கம்பம் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தடுத்து நிறுத்தினர். வேறு வழியின்றி மாளிகம்பட்டு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அனுமதியின்றி மின்வாரியத்தினர்  இரவோடு இரவாக செய்து முடித்தனர்.
 
இதுகுறித்து பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகம் கூறுகையில், 

             இனி வரும் காலங்களில் நெடுஞ்சாலை துறை அனுமதியோடு மின் கம்பங்கள் நட  உதவி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். நெடுஞ்சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்க சீனியர் பொறியாளர் அலுவலகத் தில் அனுமதி பெற்று ஒரு வாரத்தில் மின்கம்பங்கள் அகற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.
 
நெடுஞ்சாலை துறை பண்ருட்டி உதவி கோட்ட பொறியாளர் சுந்தரி கூறுகையில், 
     
                    சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றக்கோரி மின் வாரியத்திற்கு கடிதம் அனுப்பி ஐந்து மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை. அதனால், சாலை விரிவாக்க பணி குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. அதனால்,  நெடுஞ் சாலை துறை அனுமதியின்றி மின் கம்பம் அமைக்கக்கூடாது என கடிதம் அனுப்பினோம். இருப்பினும் மாளிகம் பட்டு சாலை ஓரத்தில் டிரான்ஸ்பார்மர் வைத்துள்ளனர் என்றார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior