கடலூர் :
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கடலூரில் ஜெயினர்கள் உலக அமைதி வேண்டி ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
மகாவீர் 2609 ஆண்டு ஜெயந்தி விழாவை கடலூர் பகுதியில் உள்ள ஜெயினர்கள் சிறப்பாக கொண்டாடினர். அதனையொட்டி திருப்பாதிரிப்புலியூர் கோவில் தெருவில் உள்ள பாரஸ்வா நாத ஜெயின் கோவிலிலிருந்து காலை 9 மணிக்கு ஊர்வலம் துவங்கியது. இது தேரடி தெரு, சங்கர நாயுடு தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பாரஸ்வா மன்றத்தினர் இசையுடன் பக்தி பாடல் பாடினர். இதில் ஏராளமான ஜெயினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். மதியம் உலக அமைதி வேண்டி சென்னை டாபாலு மண்டல குழுவினரின் பஜனை நடந்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக