உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா 86 பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத சான்றிதழ்

சிதம்பரம்;
 
               வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா சிதம்பரத்தில் லக்கோட்டியா கம்ப்யூட்டர் நிறுவனம், சிதம்பரம் நகராட்சி மற்றும் ஏசிடி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பா.ஜான்சன் தலைமை வகித்தார். லக்கோட்டியா கம்ப்யூட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் க.தண்டபாணி முன்னிலை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் வாழ்த்துரை வழங்கினார். செங்கல்பட்டு மண்டல  நகராட்சி நிர்வாக சமுதாய வளர்ச்சி அதிகாரி எம்.சண்முகப்பிரியா சிறப்புரையாற்றினார். மாணவர் எம்.நூருல்லா வரவேற்றார். 
 
                     விழாவில் இலவச கல்வி பெற்று வேலைக்கு தேர்வு பெற்ற 86 மாணவர்களுக்கு வேலை உத்தரவாத சான்றிதழ்களை பல பன்னாட்டு நிறுவனங்கள் சார்பாக சென்னை ஐஐடியின் துணை மையமான ஈஜிவிகா மையம் மூலம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பாக இலவச கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்காக சென்னை ஐஐடி நிறுவனம் நேரிடையாக நடத்தும் ஆன்லைன் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு மையத்தை ஐஐடியின் ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு துணை மையமான ஈஜிவிகா  ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுதாகர் துவக்கி வைத்தார். ஏசிடி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இலவச கல்வி பெறும் 598 மாணவர்கள்  சென்னை மற்றும் பெரிய நகரங்களிலுள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் சிதம்பரத்திலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் வேலைக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்று தேர்வு பெற்றார்கள். குறிப்பாக ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அதிக மாணவர்களை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைன் வேலைவாய்ப்பு மூலம் பல பன்னாட்டு நிறுவனங்களில் பல மாணவர்கள் வேலைக்கான இன்பிளாண்ட் டிரெயினிங்குக்கான உத்தரவாதத்தை பெற்றுள்ளார்கள் என எல்சிசி நிர்வாக இயக்குநர் க.தண்டபாணி தெரிவித்தார். விழா நிறைவில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற தலைப்பில் கணினி பொறியாளர் ராம்குமார் தலைமையில் விவாதமும், கருத்தரங்கும் நடைபெற்றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior