உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

திட்டக்குடி பஸ் நிலையத்தில் மீண்டும் கொட்டகை : ஆக்கிரமிப்புகளை அகற்ற நூதன போராட்டம்


திட்டக்குடி : 

                     திட்டக்குடி பேரூராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் மீண்டும் பஸ் நிலையத்தில் கொட்டகை கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
                    திட்டக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றக்கோரி இளமங்கலம், வதிஷ்டபுரம், கோழியூர் காலனி மக்கள் இரண்டு நாட்களுக்கு முன் பஸ் நிலையத்தில் கொட்டகை கட்டினர். இதுகுறித்த பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் மறுநாள் தாசில்தார் கண்ணன் முன்னிலையில் கொட்டகை அகற்றப் பட் டது. அப் போது கொட்டகையில் மாட்டியிருந்த அம் பேத்கர் படத்தின் கண் ணாடி உடைந்ததால் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவத்தால் பதட்டம் நிலவியதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
                        இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வி.சி., நிர்வாகிகள் ராஜா அலெக்சாண்டர், தமிழன்பன் உள்ளிட்டோர் பஸ் நிலைய வளாகத்தில் மேலும் இரண்டு கொட்டகைகளை கட்டினர். தகவலறிந்த டி.எஸ்.பி., இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று கொட்டகையை அகற்றினர். மேலும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் சட்டம் ஒழுங்கும் பாதிக்கும் நிலை உள்ளதாக கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிட பொது இடத்தில் ஆக்கிரமித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நூதன முறையை விடுதலை சிறுத்தை கட்சியினர் கையாண்டு வருவதால் திட்டக்குடியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior